Aṣ-Ṣaff - The ˹Solid˺ Ranks
இந்தப் பக்கத்தில் அரபு உரையைப் படித்து, தமிழ் மொழிபெயர்ப்பைப் புரிந்து, ஓதுதலைக் கேட்டு, வசனம் வசனமாக படிப்பைத் தொடரலாம். வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வைத் துதிக்கின்றன. அவனே மிகைத்தவன், ஞானமிக்கவன். ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடத்தில் மிகவும் வெறுக்கத்தக்கது.
