Al-Anfâl - Spoils of War
இந்தப் பக்கத்தில் அரபு உரையைப் படித்து, தமிழ் மொழிபெயர்ப்பைப் புரிந்து, ஓதுதலைக் கேட்டு, வசனம் வசனமாக படிப்பைத் தொடரலாம்.
(நபியே! ) போர் முனையிலிருந்து கிடைத்தவை (கனிமப் பொருட்கள்) பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்.
"அவற்றின் பங்கீடு அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் உரியது" என்று நீர் கூறும்.
ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; உங்கள் நிலையைச் சீர்படுத்திக் கொள்ளுங்கள்; நீங்கள் (உண்மையான) நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்.
நிச்சயமாக முஃமின்கள் (உண்மையான நம்பிக்கையாளர்கள்) அவர்கள்தான்: அல்லாஹ் நினைவு கூறப்படும்போது எவர்களின் இதயங்கள் அஞ்சி நடுங்குமோ, அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காட்டப்படும்போது எவர்களின் ஈமான் (நம்பிக்கை) அதிகரிக்குமோ, மேலும், எவர்கள் தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பி (தவக்குல்) இருப்பார்களோ அவர்கள்தான்.
அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (பிறருக்கு) செலவு செய்வார்கள்.
