Al-Mulk - All Authority
இந்தப் பக்கத்தில் அரபு உரையைப் படித்து, தமிழ் மொழிபெயர்ப்பைப் புரிந்து, ஓதுதலைக் கேட்டு, வசனம் வசனமாக படிப்பைத் தொடரலாம்.
அதிகாரம் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் பாக்கியமிக்கவன்; மேலும் அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்.
உங்களில் எவர் செயல்களால் மிக அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக, மரணத்தையும் வாழ்வையும் படைத்தவன்; மேலும் அவன் மிகைத்தவன், மன்னிப்பவன்.
அவன் ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். அளவற்ற அருளாளனின் படைப்பில் எந்தக் குறைபாட்டையும் நீ காணமாட்டாய்.
எனவே மீண்டும் பார்: ஏதேனும் பிளவுகளைக் காண்கிறாயா?
