Ghâfir - The Forgiver
இந்தப் பக்கத்தில் அரபு உரையைப் படித்து, தமிழ் மொழிபெயர்ப்பைப் புரிந்து, ஓதுதலைக் கேட்டு, வசனம் வசனமாக படிப்பைத் தொடரலாம்.
ஹா-மீம் இந்த வேதத்தின் அருளல் வல்லமைமிக்கவனும், யாவற்றையும் அறிந்தவனுமான அல்லாஹ்விடமிருந்தே.
பாவங்களை மன்னிப்பவன், தவ்பாவை ஏற்றுக்கொள்பவன், கடுமையாக தண்டிப்பவன், அருட்கொடைகளில் விசாலமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனிடமே இறுதி மீளுதல்.
