2. இவை தெளிவான வேதத்தின் ஆயத்துகள்.
3. நம்பிக்கை கொண்ட மக்களுக்காக, மூஸா மற்றும் ஃபிர்அவ்னின் சரித்திரத்திலிருந்து ஒரு பகுதியை நாம் உமக்கு (நபியே!
) உண்மையுடன் எடுத்துரைக்கிறோம்.
4. நிச்சயமாக, ஃபிர்அவ்ன் பூமியில் தன்னை உயர்த்திக் கொண்டான்.
அதன் மக்களைப் பல பிரிவுகளாகப் பிரித்தான்.
அவர்களில் ஒரு பிரிவினரை அவன் பலவீனப்படுத்தினான்; அவர்களின் ஆண் குழந்தைகளை அறுத்தான்; அவர்களின் பெண்களை உயிருடன் விட்டு வைத்தான்.
நிச்சயமாக அவன் குழப்பம் செய்பவர்களில் ஒருவனாக இருந்தான்.
5. ஆனால், பூமியில் பலவீனப்படுத்தப்பட்டவர்களுக்கு நாம் அருள் புரியவும், அவர்களை தலைவர்களாகவும், வாரிசுகளாகவும் ஆக்க நாம் நாடினோம்.
6. மேலும், அவர்களை பூமியில் நிலைநிறுத்தவும்; ஃபிர்அவ்னுக்கும், ஹாமானுக்கும், அவர்களின் படைகளுக்கும் அவர்கள் எதை அஞ்சினார்களோ அதை அவர்களிடமிருந்தே காட்டவும் (நாம் நாடினோம்).