An-Naḥl - Bees
இந்தப் பக்கத்தில் அரபு உரையைப் படித்து, தமிழ் மொழிபெயர்ப்பைப் புரிந்து, ஓதுதலைக் கேட்டு, வசனம் வசனமாக படிப்பைத் தொடரலாம்.
அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டது, எனவே அதை அவசரப்படுத்தாதீர்கள். அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் தூயவன், மிக உயர்ந்தவன்.
அவன் தன் கட்டளையால் தன் அடியார்களில் தான் நாடியவர் மீது வானவர்களை வஹியுடனும் இறக்கிவைக்கிறான்: "என்னை அன்றி வேறு நாயன் இல்லை என்று எச்சரிக்கை செய்யுங்கள்; எனவே எனக்கே அஞ்சுங்கள்.
" அவன் வானங்களையும் பூமியையும் உண்மையுடன் படைத்தான். அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் மிக உயர்ந்தவன்.
